இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயமாகி நடந்தேறக் காரணமாக இருந்துள்ள கல்யாணமாலை அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது. வரன் தேடுவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுடைய kmmatrimony.com இணையதளம் இருக்கிறது. ஆயினும் கல்யாணமாலை வரன் தேடுவோரைச் சந்திக்கிறது, சந்திக்க வைக்கிறது, தேடுதலை முழுமைபெறச் செய்கிறது. 2013 அக்டோபர் மாதம் அமெரிக்காவின் 6 ஊர்களில் மிகப்பெரிய அளவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. எல்லா ஊர்களிலும் திரு. மோகன் வரன் தேடுவோரை அறிமுகப்படுத்துவார். தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெறும். கீழைக்கடற்கரை படப்பிடிப்பில் பேரா. சாலமன் பாப்பையா நடுவராக பொறுப்பேற்க, திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்பார்கள். அந்தந்த ஊரிலிருந்து 4 பேச்சாளர்கள் பங்கேற்பர். சான் ஹோசே, டாலஸ், ஹூஸ்டன் ஆகிய ஊர்களில் நடிகர் பாக்கியராஜ் நடுவராகப் பொறுப்பேற்க நடிகர் பாண்டியராஜனும், வழக்கறிஞர் சுமதியும் சிறப்பு பேச்சாளர்களாகப் பங்கேற்பார்கள். அமெரிக்காவில் இத்தகைய தமிழ்த் தொலைக்காட்சிப் பேச்சரங்கம் (Talkshow) நடைபெறுவது இதுவே முதல்முறை.
நுழைவுச் சீட்டுகள் பெற: www.sulekha.com, www.bharatitamilsangam.org திருப்பதி பீமாஸ் - 408.945.1010 கோமளவிலாஸ் - 408.733.7400
செய்திக்குறிப்பிலிருந்து |