இஷா இசை: "என்றென்றும் ராஜா"
அக்டோபர் 19, 2013 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு இஷா இசை நிறுவனம் 'என்றென்றும் ராஜா' என்ற இசை நிகழ்ச்சியை ஃப்ரமிங்காம் கீஃப் டெக் உயர்நிலைப் பள்ளியில் வழங்குகிறது. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான பாடல்களை இஷா இசை நிறுவனம் தங்கள் குழுவினருடன் பாடி மகிழ்விக்கும். இந்த இசை நிகழ்ச்சியின்மூலம் பெறப்படும் நிதி இஷா வித்யா மூலம் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடப்படும்.

பாடல் குழு: பிரியா ஆனந்த், ரகு சாரனாதன், சங்கர் கங்கைகொண்டான், சுதா (லக்ஷ்மி) ராவ், உமா சங்கர் மற்றும் வசந்த் மூர்த்தி.
வாத்தியக் குழு: ஆள்தென் டிசௌஸா (கீஸ்), அன்ஷுமன் பராஷர் (பாஸ்), மனீஷ் குரூப் (கிடார்), நிகில் பென்டார்கர் (கீஸ்), பிரணவ் கத்ராஜு (தபலா), ஸ்ரீதர் கானப்புரம் (டிரம்ஸ்).
மேலும் விவரங்களுக்கு: raajashow

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com