புறம்போக்கு


ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் படம் புறம்போக்கு. 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார். "மக்களின் பொது இடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியார் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகின்றன. அதைப்பற்றிய சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டது இப்படம்" என்கிறார் கோலிவுட் குருவியார். நாயகி மற்றும் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com