இராஜராஜ சோழனின் போர்வாள்


பாடலாசிரியர் சிநேகன் நாயகனாக நடிக்கும் படம் 'இராஜராஜ சோழனின் போர்வாள்'. நாயகியாக சிநேகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரேயா, தம்பி ராமையா, அப்புக்குட்டி, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். புதுமுக இயக்குநர் ஆர்.எஸ். அமுததேஷ்வர் இயக்குகிறார். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் வெளியாக இருக்கும் வரலாற்றுத் திரைப்படம் இது. படத்தின் துவக்க விழா அன்று ஒரு பாடலுக்குக் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மக்கள் முன்னிலையில் இளையராஜா மெட்டமைத்தார் என்பது சுவாரசியமான தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com