படிக்கலாம் சிரிக்கக் கூடாது!
ஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு வகை நபர்கள் இருப்பார்கள்: வீட்டுக்குப் போக விரும்புகிறவர்கள், வீட்டுக்குப் போக விரும்பாதவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணவன் மனைவியாக இருப்பார்கள்.
- ஆன் லேண்டர்ஸ்

இரண்டு விஷயங்கள்தாம் எல்லையற்றவை: ஒன்று இந்தப் பிரபஞ்சம்; இரண்டாவது மனிதனின் முட்டாள்தனம். முதலாவதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

எனக்கு என் வேலை பிடிக்கும். அது என்னைக் கவர்கிறது. உட்கார்ந்து அதையே எத்தனை மணி நேரமானாலும் என்னால் பார்த்துக் கொண்டே இருக்கமுடியும்.
- ஜெரோம் கே. ஜெரோம்

நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று உங்கள் குழந்தை நம்புகிற வயதுதான் அவர்களுக்கு அறிவுரை சொல்லச் சரியான வயது.
- எவான் எசார்

கஞ்சர்களுடன் வாழ்க்கை நடத்துவது கடினம். ஆனால் அவர்களை முன்னோராகப் பெறுவது மிக நல்லது.
- டேவிட் பிரென்னர்© TamilOnline.com