தினை உருண்டை
தேவையான பொருட்கள்
தினை வறுத்துப் பொடித்தது - 1/2 கிண்ணம்
பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம்
நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு
நெய் - உருண்டை பிடிக்கத் தேவையான அளவு

செய்முறை:
வறுத்துப் பொடித்த தினையுடன் பொடித்த சர்க்கரை முந்திரியைக் கலந்து, நெய்யைச் சூடாக்கி, கலவையில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: குறைந்த கிளைசீமிக் குறியீடு (Glycemic Index) கொண்ட, புரோட்டீன் நிறைந்த, குளூட்டன் இல்லாத கீன்வா தினையை அரிசிபோலச் சமைத்து உண்ணலாம்.

கோமதி ஜானகிராமன்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com