கீன்வா என்பது தினையின் ஒருவகை. தேனும் தினை மாவும் முருகனுக்குப் பிடித்தவை. இந்தத் தினையைச் சாப்பிட இப்போதெல்லாம் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன? எப்படியெல்லாம் பக்குவம் செய்து சாப்பிடலாம் என்பதை நான் சொல்லப் போகிறேன்.
தினை அடை
தேவையான பொருட்கள்: தினை வறுத்துப் பொடித்தது - 1/2 கிண்ணம் வெல்லம் - 1/2 கிண்ணம் தண்ணீர் - 3/4 கிண்ணம் தேங்காய்ப் பல் - சிறிதளவு ஏலத்தூள் - சிறிதளவு
செய்முறை: 3/4 கிண்ணம் தண்ணீர் நன்கு கொதித்ததும் வெல்லம் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து 1/2 கிண்ணம் தினை, தேங்காய்ப் பல், ஏலத்தூள் சேர்த்துக் கிளறவும். ஆறியவுடன் நோன்பு அடைபோல் தட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வெண்ணெயுடன் சாப்பிடச் சுவை அலாதியாக இருக்கும்.
கோமதி ஜானகிராமன், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |