நட்புக்கு மரியாதை 'நாளை'
நட்பையே வாழ்க்கையாக நினைக்கும் இருவரின் கதையைச் சொல்லும் வகையில் உருவாகிறது 'நாளை'. கிரே பிலிம்ஸ் இந்தியா நிறுவனத்தாரால் தயாரிக்கப்படும் 'நாளை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் உதயபானு மகேஷ்வரன். இவர் வின்சன்ட் செல்வா, லிவிங்ஸ்டன் போன்றோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் ரிச்சர்ட். இந்திப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய நட்ராஜ் சுப்ரமணியன் மற்றொரு நாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் நாசர், இளவரசு, நிரோஷா போன்ற பலர் நடிக்கின்றனர்.

இசைக்குப் பொறுப்பேற்றுள்ளார் கார்த்திக் ராஜா. இந்தித் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் ஆதித்ய ஸ்ரீவாத்ஸவ் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com