'இதயத் திருடன்'
ஜெயம் ரவியை நாயகனாகக் கொண்டு 'இதயத் திருடன்' என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது கவிதாலயா. நாயகியாக நடிக்கிறார் காம்னா.

காதல் மன்னன், அமர்க்களம் படங்களை இயக்கிய சரண் இப்படத்தை இயக்குகிறார். வைரமுத்துவின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். வசனம் கிரேசி மோகன், கதை-திரைக்கதை-இயக்கம் சரண்.

ஜெயம் ரவி, காம்னாவுடன் பிரகாஷ்ராஜ், ரமேஷ்கண்ணா, வாணி விஸ்வநாத் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வரவிருக்கிறது 'இதயத் திருடன்'.

கேடிஸ்ரீ

© TamilOnline.com