தெரியுமா?: பாலபுரஸ்கார்
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. கமலவேலன், ம.லெ.தங்கப்பா வரிசையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர் எழுத்தாளர் ரேவதி. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் சீடரான ரேவதி (இயற்பெயர் ஈ.எஸ்.ஹரிஹரன்), சிறுவர்க்கான சிறுகதை, நாவல், நாடகம் உள்பட தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழதியுள்ளார். மத்திய, மாநில விருதுகள் உள்பட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். கோகுலம் சிறுவர் இதழின் ஆசிரியராக 11 ஆண்டு காலம் பொறுப்பு வகித்தவர். (பார்க்க: தென்றல் நேர்காணல் மார்ச், 2007 இதழ்) இவர் எழுதிய 'பவளம் தந்த பரிசு' எனும் நூல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் A.A. மணவாளன், பேராசிரியர் இரா. மீனாட்சி, குறிஞ்சிவேலன் ஆகியோர் கொண்ட நடுவர் குழு இந்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

விருது ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் கொண்டது பால புரஸ்கார். விருது வழங்கும் விழா வரும் நவம்பரில் நடைபெறும்.



© TamilOnline.com