தேங்காய் அரிசிப் பாயசம்
தேவையான பொருட்கள்
அரிசி - 4 தேக்கரண்டி
தேங்காய் (துருவியது) - 1 தேக்கரண்டி
வெல்லம் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 4
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை
அரிசியை ஊற வைத்துத் தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு இதில் வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதித்த பின் முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு இறக்கவும்.

காமாட்சி ரெங்கராஜன்,
சான்ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com