மகாராஷ்டிர ஸாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 300 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - இரண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை

செய்முறை
ஜவ்வரிசியைத் தண்ணீர் ஊற்றிக் களைந்து நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதை வடிகட்டி ஒரு துணியில் 2 மணிநேரம் நிழலில் உலர்த்தவும். வேர்க்கடலையை எண்ணெய் இல்லாமல் வறுத்துத் தோலை நீக்கவும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஜவ்வரிசியுடன் கலந்து கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். அதில் ஜவ்வரிசி வேர்க்கடலை கலவையைச் சேர்க்கவும். அடுப்பை நிதானமாக வைத்துக் கிளறி கனமான தட்டைப்போட்டு மூடவும். 3 நிமிடம் விட்டு, கிளறி விடவேண்டும். உப்பை தேவைக்கேற்பச் சேர்த்துப் பெருங்காயப் பொடியைப் போடவும். சிறிது கிளறிவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து கொத்துமல்லித் தழையைத் தூவி இறக்கவும். இதை விரத காலத்தில் எடுத்துக் கொள்வர்.

காமாட்சி ரெங்கராஜன்,
சான்ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com