NETS: பிக்னிக் 2013
ஜூன் 22ஆம் நாள், ஹோப்கிண்டன் மாநிலப் பூங்காவில் மதியம்முதல் மாலைவரை குழந்தைகளுடன் பெரியவர்களுமாக நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பிக்னிக் போயிருந்தோம். வகைவகையான உணவுகளைப் பலரும் செய்து கொண்டுவர, பாட்லக் விருந்து பிரமாதம். குழந்தைகளின் வயதுக்கேற்ப விளையாட்டுகள் கலகலப்பாக நடந்தன. வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெரியவர்களும் பந்து சுற்று, மூன்றுகால் போட்டி, எலுமிச்சை ஸ்பூன் விளையாட்டு என்று கலக்கிவிட்டனர். சங்கத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை அறிவிப்பை முன்னாள் தலைவர் திரு. ரமேஷ் வெங்கடரமணி வெளியிட்டார். மாலையில் சிற்றுண்டியுடன் பிக்னிக், வீடு திரும்ப மனமில்லாமல், நிறைவடைந்தது.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com