ஃப்ரீமான்ட்: சித்தி விநாயகர் கோவில்
ஜூலை 6, 2013ம் நாளன்று ஃப்ரீமான்ட் சித்தி விநாயகர் மற்றும் தெய்வங்கள் கொண்ட கோவிலின் தொடக்க விழா ஹோமம், ஸ்ரீனிவாச கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக உடுப்பி புத்திகை மடத்தின் சுவாமிகள் மற்றும் ஃப்ரீமான்ட் நகரத் துணைமேயர் அனுநடராஜன் வருகை தந்தனர்.

ஸ்டீவென்சன் மற்றும் ப்ளகோவ் சாலைகளின் சந்திப்பில் (முகவரி: 40155 Blacow Road, Fremont, CA 94538.) இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் ஆரம்ப விழாவுக்கு 2500 பக்தர்கள் வந்திருந்து முழுநாள் நிகழ்சிகளில் பங்குகொண்டனர். காலையில் கலசஸ்தாபனத்தில் துவங்கி, சகலதேவதா ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, திருப்பதியில் இருந்து தருவிக்கப்பட்ட திருமலையான் பத்மாவதி மூர்த்திகளுடன் கல்யாண உற்சவம் நடந்தது. ஞானானந்த சேவா சமாஜத்தினரின் பஜனை, சாக்ரமென்டோ கலாதாரா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் போன்றவை நடந்தன.

கோவிலில் சித்தி விநாயகர், திரயம்பகேஸ்வரர், பாலாஜி, லக்ஷ்மி, லக்ஷ்மிநரசிம்ஹர், பஞ்சமுக ஆஞ்சநேயர், குருவாயூரப்பன், விஷ்ணுதுர்கா, ஐயப்பன், நவக்கிரகம், ஷிர்டி சாய்பாபா உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி கர்ப்பக்கிரகங்கள் அமைய உள்ளன. இவை நிறைவடைந்து கோவிலின் கும்பாபிஷேகம் 2014 பிப்ரவரி 7, 8, 9 தேதிகளில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமது இஷ்ட தெய்வங்களின் கர்ப்பக்கிரக நிர்மாணத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் தொடர்புகொள்ள:

வலையகம்: svcctemple.org/fremont
மின்னஞ்சல்: siddhivinayakatemple@gmail.com
தொலைபேசி: 408-475-7822; 510-403-4256

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com