ஆகஸ்ட் 25, 2013 அன்று 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை காதல்' என்ற நிகழ்ச்சி மாலை 4:00 மணிமுதல் Old Stafford Civic Centre (1415 Constitution Ave, Stafford 77477) என்ற இடத்தில் நடக்கவுள்ளது. இதன்மூலம் திரட்டப்படும் நிதி உதவும் கரங்கள் சேவை அமைப்புக்கு வழங்கப்படும்.
உதவும் கரங்கள் அரசியல்/மதம் சாராத சமூக சேவை அமைப்பு. இது முப்பது ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், அறிவுரை தருதல், கல்வி ஆகியவற்றை அளித்து வருகிறது. 1983ஆம் ஆண்டு ஒரு சிறு குடிசையில் தொடங்கி இன்று அரசுசாரா அமைப்புகளில் தென்தமிழகத்தில் தன்னார்வு அமைப்புகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.
உதவும் கரங்களுக்கு உதவவும் இந்த நிகழ்ச்சியை பற்றி மேலும் தகவல் அறியவும்: டாக்டர். பத்மினி, தலைவர், உதவும் கரங்கள் USA, தொலைபேசி: 713-829-2040 மின்னஞ்சல்: prn198@aol.com வலையகம்: www.udavumkarangal.org
விஜயலட்சுமி, ஹூஸ்டன், டெக்சஸ் |