ஜெய்ஹிந்த் 2


பல ஆண்டுகளுக்கு முன் ஜெய்ஹிந்த் வெற்றிப் படத்தைத் தந்த அர்ஜுன், அதன் இரண்டாம் பாகத்தை 'ஜெய்ஹிந்த் 2' என்ற பெயரில் தயாரித்து வருகிறார். நாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். உடன் செந்தில், பிரம்மானந்தம், மயில்சாமி, மனோபாலா, ராகுல்தேவ், ரவி காளே, ஷஃபி, ராஜீவ் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுத, ஹரி கிருஷ்ணா இசையமைக்கிறார். கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், அந்தத் துறையிலுள்ள தில்லுமுல்லுகள் நீங்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சாதாரண மனிதன் அதற்காக என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை. "தேசப்பற்று, சமுதாய அக்கறை கொண்ட கமர்ஷியல் படமாக ஜெய்ஹிந்த் 2 தயாராகிறது. இப்படத்தை அப்துல்கலாமுக்கும், பத்திரிகை சமுதாயத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்கிறார் கதை, திரைக்கதை எழுதி, நடித்து, இயக்கியிருக்கும் அர்ஜுன்.

அரவிந்த்

© TamilOnline.com