மறுமுகம்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இன்னொரு முகத்தைப் பற்றிச் சொல்ல வருகிறது மறுமுகம். டேனியல் பாலாஜி ஒரு பணக்கார இளைஞர். அன்புக்கு ஏங்குகிறார். ஒரு பெண்ணைக் காண்கிறார், காதல் கொள்கிறார். ஆனால் அவளோ வேறொரு இளைஞனின்மீது காதல் கொள்கிறாள். பாலாஜி அவளை அடைந்தாரா, அந்தப் பெண்ணின் காதல் வென்றதா என்பதை த்ரில்+சஸ்பென்ஸ் கலந்து சொல்கிறது மறுமுகம். நாயகியாக ரன்யா நடிக்கிறார். உடன் அனுப், ப்ரீத்தி தாஸ், பானு சந்தர், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கமல் சுப்பிரமணியம் படத்தை இயக்குகிறார். இசை: அகஸ்தியா.

அரவிந்த்

© TamilOnline.com