ரம்மி
சூது கவ்வும் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படம் ரம்மி. படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பவர் இனிகோ பிரபாகர். நாயகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் 'பரோட்டா' சூரி நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி ஆகிய மூன்று பேரின் ஆழமான நட்பு, மற்றும் காதலை அழகாக பதிவு செய்கிற படம்தான் "ரம்மி"," என்கிறார் படத்தின் இயக்குனர் கே. பாலகிருஷ்ணன்.



அரவிந்த்

© TamilOnline.com