150க்கும் மேற்பட்ட இந்தியச் சேனல்களைத் தரும் யப்டிவி, இனிமேல் தெற்காசியப் படங்களைக் 'கேட்டால் கிடைக்கும்' (மூவி ஆன் டிமாண்ட்) சேவையில் தரவுள்ளது. இணையத் தொடர்புள்ள சாதனங்களில் ரசிகர்கள் தாம் விரும்பும் படங்களைப் பார்க்க மாதாந்திரச் சந்தா $4.99 செலுத்தலாம் அல்லது ஒவ்வொரு முறை பார்க்கவும் கட்டணம் தரலாம். இதைத் தவிர 'Premiere Movies' பகுதியில் அண்மையில் வந்த படங்களைப் பார்க்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதைக் குறித்துக் கூறிய திரு. உதய் ரெட்டி, “ரசிகர்கள் தமக்கு வசதியான நேரத்தில் தத்தமது டி.வி. அல்லது பிற கருவிகளில் தமக்குப் பிடித்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும், அதிகச் செலவு காரணமாக உலக அளவில் படவினியோகம் செய்ய முடியாமற்போனாலும், அந்தப் படங்களை உலகின் எப்பகுதிக்கும் இதன்மூலம் காணத் தருவது படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்” என்று கூறினார்.
செய்திக்குறிப்பிலிருந்து |