தமிழகத்தின் தொழில் நகரமாகிய கோவையில் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கென அம்ரித் செயல்பட்டு வருகிறது. இது 1963-ம் ஆண்டு அமிர்தம் வரதராஜ் தலைமையில் இயங்கிய மாதர் சங்கத்தால் நிறுவப்பட்டது.
குறிக்கோள்கள்
அம்ரித் மூன்று தலையாய குறிக்கோள் களைக் கொண்டுள்ளது: கருத்தரித்துத் தாய்மையுற்ற காலத்தி லேயே கருவில் ஏற்படும் குறைபாடு களைத் தொடக்க நிலையிலேயே சரி செய்தல்.
குறைபாடுள்ள குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லும் குறைபாடற்ற குழந்தைகளுடன் இணைந்து பயில்வதற்கான வழிமுறை களைக் கண்டறிதல் தேவையான தொழிற்பயிற்சியை அளித்து உடலாலும் மனதாலும் ஊனமுற்ற குழந்தைகள் சமுதாய மேம்பாட்டுக்கு உறுதுணையாக நிற்பதற்கான வழிவகை களை ஆராய்ந்து முனைப்புடன் செயல்படுத்துதல்.
முன்மாதிரி
'வித்யாசாகர்' என்ற பெயரில் சென்னையில் செயல்படும் தன்னார்வத் தொண்டு மையத் தின் நிறுவனரான பூனம் நடராஜன் அவர்கள் அம்ரித் தொண்டு நிறுவனத்துக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அம்ரித் தனது இலக்குகளை நோக்கிய பயணத்தைக் கருத்தில் கொண்டு இவர் ஆசிரியர் களுக்குத் தேவையான தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிப்பதுடன் நிறுவனத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது கண் காணித்தும் நெறிப்படுத்தியும் வருகிறார்.
சேவைகள்
மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்கைளுக்கும் காது கேளாத-வாய் பேசாத குழந்தைகளுக்கும் தனித்தனி வகுப்புகள் நிறுவிச் சிறப்புப் பயிற்சி அளித்தல் இவர்களுக்குத் தங்குவதற்கு விடுதி வசதி அளித்தல் மேற்படி குழந்தைகளுக்குப் பயிற்சியுடன் கூடிய தொழிற்கல்வி புகட்டுதல் செவித்திறனை மேம்படுத்திப் பேச்சுப் பயிற்சிக்கான தனிப்பிரிவு வழிகாட்டு மையம் (Counselling Centre)தொழிற்கல்விக்குப்பின் சிறப்புப் பயிற்சிக் கான தொழிற்களம் தகுதியான குழந்தைகளுக்குக் கணினிப் பயிற்சி போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கென தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சிப்பள்ளி
செயல்முறைக் கல்வி
காகித உறைகள் மற்றும் அலுவலகக் கோப்புகள் தயாரித்தல், சாக்பீஸ் மற்றும் வண்ணப் பென்சில்களை உற்பத்தி செய்தல், கைவினைப் பொருள்களைத் தயாரித்தல், கிருமிக் கொல்லியான பினாயில் தயாரித்தல் ஆகிய தொழில்களில் குழந்தைகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பணிசெய்வோர்
தலைமை ஆசிரியை உட்படப் பதினைந்து ஆசிரியர்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட், ஒரு ஸ்பீச்தெரபிஸ்ட் என மொத்தம் பதினேழு பேர் இந்த நிறுவனத்தில் முழு நேர ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களுள் இரண்டு ஆசிரியர்களுக்கான ஊதியத்தைத் தமிழக அரசு வழங்கி வருகிறது. எஞ்சியவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடையி லிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.
அம்ரித் சிறப்புப் பள்ளிகளில் 67 மனநிலை பாதிக்கப்பட்டோரும் 33 உடல் ஊன முற்றோரும் பயிற்சி பெறுகிறார்கள். விடுதியில் 27 மாணவர்கள் தங்கியுள்ளனர். உடலாலும் மனதாலும் ஊனமுற்ற குழந்தை களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இந்தத் தொண்டு நிறுவனத்தில் கூடி வருகிறது.
கற்பதற்கான வசதிகள்
நன்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஒலிபுகாத வசதியுடன் கூடிய செவித்திறன் பரிசோதனைக் கூடம், அனைத்து வசதி களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை அம்ரித்தின் சிறப்பு அம்சங்கள்.
நிதி ஆதாரங்கள்
விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 8000 ரூபாயும், வெளியிலிருந்து வந்து போகும் மாணவர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5000 ரூபாயும் செலவிட வேண்டியுள்ளது. இந்தச் செலவு ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது. கொடை மனமும் இரக்கச் சிந்தனையும் உடைய பொது மக்கள், தொழில் அதிபர்கள், ரோட்டரி, மாதர்சங்கம், இன்னர் வீல், அரிமா ஆகிய சங்கங்களும், சத்யசாய் சமிதி என்ற அமைப்பும் வழங்கும் நன்கொடைகள் அம்ரித் நிறுவனத்திற்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.
நிர்வாகம்
இப்பள்ளியை அரவிந்த் கிக்கானி தலைமையில் 19 பேர் கொண்ட நிர்வாகக் குழு வழி நடத்துகிறது. இப்பள்ளியின் இணையதளம்: www.amrit-ifsn.com நீங்களும் நிதி உதவி செய்யலாம். உங்கள் காசோலை மற்றும் வரைவோலைகளை 'The Society for the aid of Handicapped Children' என்ற பெயரில் எழுதவேண்டும்.
முகவரி: The Society for the Aid of Handicapped Children 34, Mettypalayam Road Coimbatore - 641 043 Tamil Nadu, India தொலைபேசி: 91-422-244 1902 |