ஆகாஷ் லக்ஷ்மணன்
நேப்பர்வில்லில் உள்ள ஸ்டில் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வன். ஆகாஷ் லக்ஷ்மணன், இல்லினாய் ஜூனியர் அறிவியல் அகாடெமியின் மாநில அளவிலான வருடாந்திரப் போட்டியில் பொன் விருது பெற்றுள்ளார். சூரிய நிறமாலை குறித்த இவரது ஆய்வு இந்த விருதைப் பெற்றுத் தந்துள்ளது. சுற்றுச்சூழல் அறிவியல் இளநிலைப் பிரிவில் மிகச் சிறந்தவராகவும் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது பெற்றோர் அஷோக் லக்ஷ்மணன், சுபப்ரியா லக்ஷ்மணன்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com