குடைமிளகாய் புளிப்பச்சடி
தேவையான பொருட்கள்
பச்சைக் குடைமிளகாய் (சுமாரான சதுரங்களாய் நறுக்கியது) - 3
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் (நீளமாகக் கீறியது) - 4
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் சேர்த்துச் சிறிது சிவந்ததும் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், குடைமிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து, புளிக்கரைசலைச் சேர்க்க வேண்டும். புளி வாசனை போகக் கொதித்தபின் அரிசி மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். தித்திப்பு பிடித்தவர்கள் சிறிது வெல்லம் சேர்க்கலாம். சிறிது கொதித்ததும் இறக்க வேண்டும். பச்சை மிளகாய் காரமும், குடை மிளகாய் வாசமும், இனிப்பும் குழம்பு கூட்டுக்கும் தயிர் சாதத்திற்கும் சரியான ஜோடி சேரும்.

வர்தினி நாராயணன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com