திருவள்ளுவர் ஆண்டுக்கு முதலாவது மாதம் தை மாதந்தான். இறுதி மாதம் மார்கழி. உண்மையான தமிழ் சகாப்தம் திருவள்ளுவர் ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! தமிழில் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்க 1921-ம் ஆண்டு தமிழறிஞர்கள் ஒன்றுகூடி ஆராய்ச்சி செய்தனர். அதில், இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்று முடிவு செய்தனர். அதனால் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நடக்கும் திருவள்ளுவர் ஆண்டைக் கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்ட வேண்டும். திருவள்ளுவர் தினத்தை நாம் 2006-ல் ஜனவரி 15ம் நாள், தை மாதப் பிறப்பன்று கொண்டாடப் போகிறோம்.
இளவேலங்கால் நல்லய்யா |