மே 18, 2013 அன்று தென்மத்திய தமிழ் சங்கம் (Mid-South Tamil Sangam) 'காதலிக்க நேரமுண்டு' என்ற நாடகத்தை ஹாரெல் தியேட்டரில் அரங்கேற்றியது. சங்கத்தின் மெம்ஃபிஸ் நாடக மன்றம் தஞ்சை நடராஜன் அவர்களின் இயக்கத்தில் மேடையேற்றும் ஒன்பதாவது நாடகம் இது. தயாரிப்பு நிர்வாகத்தை சங்கரன் மற்றும் லலிதா சங்கரன் பொறுப்பேற்று நடத்தினர். ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3'யுடன் சேர்த்து இந்த நாடகம் ஒரு நகைச்சுவை விருந்தாக அமைந்தது.
உஷா ஸ்ரீதர், மெம்ஃபிஸ், டென்னசி |