மிச்சிகன்: வைகாசி விசாகம்
மே 25, 2013 அன்று தொடங்கி, 13ம் ஆண்டாக வைகாசி விசாகத் திருவிழாவை இரண்டு நாட்கள் பாண்டியாக் பராசக்தி கோவிலில் சிறப்பாகக் கொண்டாடினர். மிச்சிகன் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினரின் உதவியுடன் மெய்யப்பன் இதனை ஒருங்கிணைந்து நடத்தினார். முதல்நாளன்று பக்தர்கள் ஜேசீ பார்க்கிலிருந்து பராசக்தி ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றனர். பாதயாத்திரை நிறைவு பெற்றபின், ஆலயத்தில் காவடி பூசை நடந்தது. அழகான காவடிகளுக்கு முன் பக்தர்கள் முருகன் பாடல்களைப் பாடினர்.

மே 26ம் நாள் வைகாசி விசாகத் திருவிழா அன்று காலை பக்தர்கள் முருகனுக்கு பால் குடம், காவடி எடுத்தனர். முருகன் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பவனி வந்தார். பின்தொடர்ந்த பால்குடம் மற்றும் காவடிகளின் பால் மற்றும் பல அபிஷேகப் பொருள்களைக் கொண்டு வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. இனிய திருப்புகழ் பாடல்களைத் திருப்புகழ் குழுவினர் இசைத்தனர். ஆலய ஸ்தாபகர் டாக்டர். குமார் முருகன் பெருமையை எடுத்துரைத்தார். தொடர்ந்து சொல்லின் செல்வி உமையாள் முத்து வைகாசி விசாகத் திருவிழாவைப் பற்றி உரையாற்றினார். முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அழகம்மை மெய்யப்பன்,
போண்டியாக், மிச்சிகன்

© TamilOnline.com