2013 மே 24ம் தேதிமுதல், ஜூன் 30ம் தேதிவரை, 'அம்மா' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், ஆல்பகர்க்கி, டாலஸ், அயோவா, டொரன்டோ (கனடா) ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் திருவுருவான அம்மா, தம்மைக் காணவந்தோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.
அம்மாவின் அமுதமொழி: "அடுத்த கணம் நமது கையில் இல்லை. அடுத்த மூச்சு விடுவது நிச்சயமில்லை. கடந்த காலம் என்பது செல்லாத காசோலையைப் போன்றது - அதற்கு மதிப்பு இல்லை. நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இந்தக் கணத்தில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஐஸ்கிரீம் சாப்பிடும் ஒருவன், கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் பற்றி நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், ஐஸ்கிரீமின் சுவையை அவனால் உணர முடியாது. இந்த கணத்தில் வாழ்ந்தால்தான் வாழ்க்கையைச் சுவைக்க முடியும்."
ஜூலை மாதத்தில் அம்மாவின் பயண விவரம்: சிகாகோ 07.03 - 07.05 வாஷிங்டன் டி.சி. 07.07 - 07.08 நியூ யார்க் 07.11 - 07.13 பாஸ்டன் 07.15 - 07.18
இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். பாஸ்டனில் ஆன்மீக முகாம் (retreat) நடைபெறும். இதில் ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org/activity மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர், சான் ரமோன். |