'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். இவர் அடுத்துப் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்கிற வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார். நாயகிகளாக 'மனம் கொத்திப் பறவை' நாயகி ஆத்மியாவும் காருண்யாவும் நடிக்கின்றனர். படம் குறித்து ராமகிருஷ்ணன், “இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு. வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும்தான் இருக்கு. எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்னன்னு ஒண்ணுமே புரியல. பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்தறாங்க., பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்தறாங்க அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் இது என்கிறார். சரிதான்!
அரவிந்த் |