பிரம்மன்


'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்துப் பாராட்டு பெற்றவர் சுதீப். இவர் தற்போது தமிழில் புதிதாக நடிக்கும் படம் பிரம்மன். கமலின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். முக்கியமான எதிர்நாயகன் வேடத்தில் சுதீப் நடிக்கிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்தன். நான் ஈ படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் தமிழில் நடிக்க மறுத்து வந்தவர், இக்கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதித்திருப்பது கதையின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

அரவிந்த்

© TamilOnline.com