தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர்
2013ம் ஆண்டுக்கான 'Toastmaster of the Year' விருதை ரவிகாந்த் கணேசன் வென்றிருக்கிறார். ஒரு மாவட்டத்தின் இலக்குகளை எட்டப் பெருமளவில் உதவிய உறுப்பினரின் கல்வி, புது உறுப்பினர் சேர்க்கை, சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபாடு, விளம்பரம் என்ற பல்வேறு அளவுகோல்களை வைத்து இந்தச் சிறப்பு அளிக்கப்படுகிறது. மே மாதம் 11ம் தேதியன்று நடந்த இந்தச் சங்கத்தின் வசந்தகாலக் கூட்டத்தின் புகழ் அரங்க விழாவில் ரவிகாந்துக்கு விருதினை மிரியம் கோஜ்னோக் (4வது மாவட்ட கவர்னர்) வழங்கிக் கவுரவித்தார்.

பெர்னார்ட் ஏரியஸ்,
பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com