கணிதப் புதிர்கள்
1) ஒரு குளத்தில் சில தாமரைப் பூக்கள் இருந்தன. அதை நோக்கிச் சில வண்டுகள் வந்தன. 1 பூவிற்கு 1 வண்டு என உட்கார்ந்தால் 4 வண்டுகள் பூ கிடைக்காமல் மீதம் இருந்தன. அவையே 1 பூவிற்கு 3

வண்டுகளாய் அமர்ந்தபோது 4 மலர்கள் மீதம் இருந்தன என்றால், வண்டுகள் எத்தனை, பூக்கள் எத்தனை?

2) ராமுவின் வயதையும் அவன் தம்பி சோமுவின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத் தொகை 36. ராமு வயதின் இரண்டடுக்கையும் சோமு வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 656 வருகிறது. ராமுவின்

வயதை விட சோமுவின் வயது நான்கு வருடம் குறைவு என்றால் ராமுவின் வயது என்ன, சோமுவின் வயது என்ன?

3) 22, 21, 23, 22 ... இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

4) ஒரு பண்ணையில் சில ஆடுகளையும் புறாக்களையும் வளர்த்து வந்தார்கள். அவற்றின் மொத்த எண்ணிக்கை 52. அவற்றின் கால்களை எண்ணினால் 150 வருகிறது. அப்படியானால் ஆடுகள் எத்தனை, புறாக்கள்

எத்தனை?

5) ராதா மற்றும் கீதாவின் தற்போதைய வயது விகிதம் 4 : 3. மூன்று வருடங்கள் கழித்து அவர்களின் வயது விகிதம் 9 : 7 ஆக இருக்கிறது என்றால் அவர்களது தற்போதைய வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com