முளைப்பயறு சப்ஜி
தேவையான பொருட்கள்
முளைப்பயறு - 2 கிண்ணம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகப்பொடி - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
ஏலப்பொடி - 1/8 தேக்கரண்டி
சீரகம் -- 1 தேக்கரண்டி
கிராம்பு - 6
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணை - 2 மேசைகரண்டி
நறுக்கிய கொத்துமல்லி - 2 மேசைக்கரண்டி

மசாலா:
நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 6
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி

செய்முறை :
மசாலா சாமான்களை எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். எண்ணையை ஒரு கனமான பாத்திரத்தில் விட்டுச் சூடாக்கவும். பின்னர், அதில் மஞ்சள்பொடி, ஏலப்பொடி, சீரகம், கிராம்பு போடவும். சீரகம் வெடிக்கும்போது, வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

பிறகு, தக்காளியைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதன்பின் முளைப்பயறும், 1 டம்ளர் தண்ணீரும் சேர்த்து, பாத்திரத்தை மூடி, 10 நிமிடம் கொதிக்க விடவும். முளைப்பயறு வெந்த பின்னர், மல்லித்தூள், சீரகப்பொடி, உப்பு, அரைத்த மசாலா, எல்லாவற்றையும் அதனுடன் கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து, சிறிது ஆறியபின் கொத்துமல்லித் தழை தூவினால் சப்ஜி தயார்.

லதா சந்திரமௌளி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com