நியூ ஜெர்சி: அன்னையர் தினம்
மே 5, 2013 அன்று Golden Elephant Events கோபிநாத்தின் 'வாங்கபேசலாம்' நிகழ்ச்சியையும் அமெரிக்காவில் வாழும் பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியையும் நடத்தியது. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியின் மாண்ட்கோமரி உயர்நிலைப்பள்ளியில் நடந்தன.

'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியின் தலைப்பு 'அடுத்த தலைமுறை அமெரிக்காவில் வளர்வதால் நம் கலாசாரம் வளர்கிறதா? தளர்கிறதா?" நிகழ்ச்சியில் பங்குபெற வெளிமாநில தமிழர் பலரும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கோபிநாத் அவர்கள் சுவைபட நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார். நிகழ்ச்சி அமைப்பாளர் தேவி நாகப்பன், இன்றைய காலகட்டத்தில் அயாராது உழைக்கும் பெண்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்த எண்ணினார்கள். அமெரிக்காவில் வாழ்ந்து , தம்மைப் பொதுத் தொண்டில் ஈடுபடுத்திக்கொண்ட பெண்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்பட்டது. கோபிநாத் இந்த விருதுகளை வழங்கினார்.

அடுத்து ஜூன் 1, 2013 அன்று நடக்கவிருக்கும் மெல்லிசை நிகழ்ச்சியில் சத்யா பிரகாஷ், சாருலதாமணி, சாய் ஈசன், சுரேஷ் ராமசந்திரன், அனிதா கிருஷ்ணா ஆகியோர் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சிமூலம் இந்தியாவில் வாழும் AIDS கொண்ட குழந்தைகளுக்கு ATMA (American Tamil Medical Association) நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

தீபா இராமநாதன்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com