மே 19, 2013 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், இடைமேற்கு மாநிலத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, மூன்றும் இணந்து நான்காவது தமிழர் நினைவு நாளன்று, இலங்கையில் உயிரிழந்த தமிழர்க்கு மரியாதை அளிக்கும் வகையாக அரோரா (சிகாகோ) உள்ள Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506) இல்லத்திலுள்ள 120க்கும் மேற்பட்ட வறியோர்க்கு உணவு வழங்கினர். பின்னர் வறியோர்க்குத் தமிழர் பற்றிய விவரக்குறிப்பும், முள்ளிவாய்க்கலில் உயிர்நீத்த தமிழர்பற்றிய விவரக்குறிப்பும், திருவள்ளுவரின் வாழ்முறை தாங்கிய குறளதிகாரங்களின் குறிப்புக்களும், பிறநாட்டவர் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாறு குறித்த செய்திகளும் வழங்கப்பட்டன. இதற்கு முன்னர் மருந்துகள், அன்றாடப் பயன் பொருட்கள் தவிர மறுநாள் காலைக்கான தின்பண்டங்களும் அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டன.
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் செல்வி. சாமா, செல்வன். ஏரகன், சுபாசு, பிரிண்டெட், வருண் மற்றும் தமிழ்த் தொண்டர்கள் கிருத்திகா, தேவி, மாலாதேவி, அண்ணாமலை, சாக்கரடீசு, சுகந்தகுமார் பாபு இவ்வாண்டின் இந்த மூன்றாவது வறியோர்க்கு உணவு நிகழ்ச்சியில் தொண்டாற்றினர். வறியோர் இல்ல வாசிகள் நன்றி தெரிவித்தனர். அமைப்புக்களின் சார்பில் வ.ச. பாபு நன்றி தெரிவித்தார்.
செய்திக் குறிப்பிலிருந்து |