தர்பார் ஃபைன் ஆர்ட்ஸ்: டாக்டர் விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் நிகழ்ச்சிகள்
தர்பார் ஃபைன் ஆர்ட்ஸின் சார்பில் பிரபல கர்நாடக சங்கீதக் கலைஞர் டாக்டர். விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் மூன்று நிகழ்ச்சிகளை விரிகுடாப் பகுதியில் நடத்தவுள்ளார். இசைத் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்ட விஜயலக்ஷ்மி, பாரம்பரிய கர்நாடக சங்கீதத்தில் குறிப்பிடத்தக்க பாடகர். ஆழ்ந்த இசைப் புலமை கொண்டவர். அவர் வழங்கவிருக்கும் நிகழ்ச்சிகளாவன:

கர்நாடக இசைப் பயிற்சிப் பட்டறை
கருத்து: 20ம் நூற்றாண்டின் இணையற்ற சங்கீத வித்வான்களின் அபூர்வ கிருதிகள். (தமிழிசைப் பாடல்கள்)
நாள், நேரம்: ஜூன் 19 மதியம் 2.00 - 4.00
ஜூன் 20, 21 காலை 10.00 - 12.00
இடம்: 111, Meadows Ct. Fremont, CA-94539.

கர்நாடக இசைக் கச்சேரி
பாடுபவர்: டாக்டர் விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்
பக்கவாத்தியம்: ரஞ்சனி ராமகிருஷ்ணன் – வயலின்; ஸ்ரீராம் பிரம்மானந்தம் – மிருதங்கம்.
நாள், நேரம்: ஜூன் 29 - சனிக்கிழமை மாலை 4.30 மணி
இடம்: ஷிர்டி சாயி மந்திர், மில்பிடாஸ்

செயல்விளக்கச் சொற்பொழிவு (LecDem)
பயிற்சிப் பட்டறையில் பங்குகொண்ட மாணவர்கள் நிகழ்ச்சியும், தொடர்ந்து 'நாதயோகி தியாகராஜர்' என்ற தலைப்பில் விளக்கச் சொற்பொழிவும் நடக்கும்.
நடத்துபவர்: டாக்டர். விஜயலக்ஷ்மிசுப்ரமணியம்
பக்கவாத்தியம்: சரவணப்பிரியன் ஸ்ரீராம் (வயலின்); ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்)
நாள், நேரம்: ஜூன் 30 ஞாயிறு மாலை 4.00 - 6.30 மணி
இடம்: Pat Krishnan's house, 10677 Amulet Place, Cupertino, CA 95014.

மேலும் விவரங்களுக்கு:
ரமேஷ்/சுஜாதா - 510-687-0937.
மின்னஞ்சல் - svr_fremont@yahoo.com

டாக்டர் விஜயலஷ்மி சுப்ரமணியம்பற்றி மேலும் அறிய: www.vijayalakshmysubramaniam.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com