நந்தலாலா மிஷன்: விஜய கீதம்
ஜூன் 15, 2013 அன்று நந்தலாலா மிஷனின் சமூகநலப் பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாக, மாளவிகா ஸ்ரீராம் அவர்கள் வழங்கும் 'விஜய கீதம்' என்ற நிகழ்ச்சியை Divine Science Community Center (1540 Hicks Ave, San Jose, CA 95125) அரங்கத்தில், காலை 10 மணிமுதல் நடத்தவுள்ளார்கள். இது பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி அவர்களின் முன்னிலையில் நடைபெறும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் மீதான பல்வேறு சாகித்ய கர்த்தாக்களின் பலமொழிப் பாடல்கள் இவ்வரங்கில் இசைக்கப்படும். பார்த்திவ் மோஹன் (வயலின்), விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசிப்பார்கள். ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குதல், பள்ளியில் பயிலும் ஏழைச் சிறாருக்குப் புத்தகம்/நோட்டுக்களோடு புத்தகப்பை வழங்குதல், இளையோர் இசை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற சமூகப் பணிகளுக்கு இதில் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும்.

தொடர்புகொள்ள: nandalalamission@gmail.com
வலைமனை: www.nandalala.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com