ஜூன் 2013: வாசகர் கடிதம்
மே மாதத் தென்றல் அருமையாக இருந்தது. தென்றல் விளம்பரங்கள், நிகழ்ச்சி விபரங்கள் யாவும் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளன. தென்றல் வந்தவுடனே முதலில் நான் படிப்பது 'தென்றல் பேசுகிறது’தான்.

இந்த இதழில்என்ன இருக்கிறது, என்ன எதிர்பார்க்கலாம் என்பன போன்ற விஷயங்களும், இந்தியா, அமெரிக்கா மற்ற நாடுகளின் நடப்பு விஷயங்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்து விடுவதால்,

முதலில் நான் அதைப் படிக்கிறேன்.

வயது எத்தனை என்பது முக்கியம் இல்லை, நம்முடைய குறிக்கோள் அதற்கான தளராத முயற்சி எடுத்துச் சந்தோஷமாகச் செய்தாலே சாதனை படைக்க முடியும் என்பதற்கு ஒரு சான்று ராணி ராமஸ்வாமியின்

நேர்காணல். அடுத்த மாத நேர்காணலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகத்துடன், அவர்தம் படைப்புக்களையும் கொடுத்து, அவர்களைத் தெரிந்துகொள்ள வைக்கும் தென்றலின் வழியே தனிவழி. அந்த வரிசையில் பெருமாள் முருகனின் 'கோம்பை சுவர்’

எழுத்துநடை, மொழிநடை மறக்கமுடியாதது. உமாசந்திரன் கதைகள் எனக்கு மிகப் பிடித்தவை. அவர் மகன்தான் நடராஜ் ஐ.பி.எ.ஸ். என்பதைத் தென்றல் நேர்காணல் மூலம்தான் தெரிந்து கொண்டேன். நடராஜ்

அவர்கள் வீரப்பனைப் பிடிப்பதில் சந்தித்த சவால்களையும் கடினமான செயல்பாடுகளையும் கேட்கச் சுவையாக இருந்தது. எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்கு வழிகண்ட முன்னோடி ரா.பி. சேதுப்பிள்ளையைப் பற்றிய

குறிப்புக்கள் முக்கியமானவை. அபர்ணா பாஸ்கரின் 'பாலிகை’ மனதை வருடிய தூரிகையானது.

சந்தானம் அவர்களின் 'உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்' படித்தேன். ஊகூம்....இன்றுவரை குழப்பமாகவே உள்ளது. பதில் சொல்ல முடியவில்லை. இளம் சாதனையாளர் வினித்ரா சுவாமிக்குப் பாராட்டுகள்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா.

*****


'தென்றல்’ ஒரு சூப்பர் படைப்பு. அட்டையிலிருந்து கடைசிவரை எல்லாமே சூப்பர். அமெரிக்க வாழ்க்கைபோல் ஓர் ஒழுங்குடன் தகவல்கள், தலையங்கம், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள்,

நிகழ்வுகள், விமர்சனங்கள் எல்லாமே சுவைபட அமைந்து ஒரு நல்ல வாசிப்பை, அறிவு வளத்தைத் தருகிறது.

கே.ஆர். பாலகிருஷ்ணன்,
கேரல்டன், டெக்சாஸ்

*****

© TamilOnline.com