திருப்பங்கள்


நந்தா நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கும் படம் 'திருப்பங்கள்'. இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார் மும்பை நடிகை சுர்விர். மும்பை நட்சத்திரங்களான கவுதம் குரூப், சாம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் எனப் பலரும் தொடர்ந்து கடத்தப்படுகின்றனர். கடத்துபவர் யார், ஏன், அவர் பிடிபட்டாரா என்பதை ஆக்‌ஷன், திகில் கலந்து சொல்ல வருகிறது 'திருப்பங்கள்'. பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாரதா ராமநாதன்.

அரவிந்த்

© TamilOnline.com