உயிருக்கு உயிராக


கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் "உயிருக்கு உயிராக" இதனை மனோஜ்குமார் இயக்குகிறார். இதில் சரண் சர்மா, சஞ்சீவ் ஆகியோர் நாயகர்களாகவும், நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடங்களில் பிரபு, ஸ்ரீரஞ்சனி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாந்தகுமார் இசையமைக்கிறார். காதல் + செண்டிமெண்ட் + ஆக்‌ஷன் கலந்த அதிரடிப் படமாக உருவாகி வருகிறது உயிருக்கு உயிராக.

அரவிந்த்

© TamilOnline.com