பாண்டியநாடு


விஷால் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பாண்டிய நாடு'. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் நாயகி லட்சுமி மேனன். விக்ராந்த், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் சுசீந்திரன். வசனம்: பாஸ்கர் சக்தி. பாடல்களை வைரமுத்து எழுத இசையமைக்கிறார் டி.இமான். தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'பட்டத்து யானை' படத்தில் நடித்து வரும் விஷால், அதை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார். படத்தயாரிப்பாளரும் விஷால்தான் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com