1) ஐந்தை ஐந்துமுறை பயன்படுத்திk கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ மொத்தத் தொகை 27 வருமாறு செய்ய வேண்டும். இயலுமா?
2) 4 x ... / 8 + ... - 2 = 4. இந்த வரிசையில் மறைந்திருக்கும் எண்கள் எவை?
3) சோமு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுச் சில பதக்கங்களை வாங்கினான். அவன் தந்தை அதற்குப் பரிசாக முதல் பதக்கத்திற்கு 1 டாலரும், 2 வது பதக்கத்திற்கு 2 டாலரும், 3 வது பதக்கத்திற்கு 4
டாலரும் என தொடர்ந்து இரு மடங்குகளாகக் கொடுத்தார். சோமு தன்னுடைய பதக்கங்களுக்காக மொத்தம் 511 டாலரைத் தந்தையிடமிருந்து பெற்றானென்றால் அவன் வாங்கிய பதக்கங்கள் எத்தனை?
4) 7, 5, 8, 4, 9, 3, ?
அடுத்து வரும் எண் எது, ஏன்?
5) ஒரு பண்ணையில் சில பசுக்களும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 36 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 124 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?
அரவிந்த்
விடைகள்1) 27 = 55 + (5+5/5)
2) முதல் பதக்கம் = 1$
இரண்டாம் பதக்கம் = 2$
மூன்றாம் பதக்கம் = 4$ = 1$ + 2$ + 22$ + ...... 2n-1$ = 511
2n - 1 = 511
2n = 511 + 1 = 512
n= 29 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 = 512
ராமன் வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை = 9
3) அந்த எண்கள் = 6, 3
4 x 6 / 8 + 3 - 2 = 4
4) 7, 5, 8 = முதல் எண்ணிலிருந்து இரண்டைக் கழித்தால் இரண்டாம் எண் கிடைக்கிறது (7 - 2 = 5). இரண்டாம் எண்ணுடன் மூன்றைக் கூட்டினால் மூன்றாம் எண் கிடைக்கிறது ( 5 + 3 = 8).
மூன்றாம் எண்ணிலிருந்து நான்கைக் கழித்தால் வருவது நான்காம் எண் (8 - 4 = 4). அத்துடன் ஐந்தைக் கூட்ட வருவது ஆறாம் எண் (4 + 5 = 9). அதிலிருந்து ஆறைக் கழிக்க ஏழாம் எண் வருகிறது (9 - 6
= 3). இம்முறையின் படி வரிசையில் தொடர்ந்து வர வேண்டிய எண் = 3 + 7 = 10.
5) பசுக்கள் = x ; கோழிகள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 36;
ஒரு பசுவுக்குக் கால்கள் = 4 = 4x;
ஒரு கோழிக்குக் கால்கள் = 2 = 2y
4x + 2y = 124;
x + y = 36 ; x = 36 - y
4x + 2y = 124 = 4 (36 - y) + 2y = 124
144 - 4 y + 2 y = 124
-2 y = 124 - 144 = -20
y = 10
x = 36 - y = 36 - 10 = 26
பண்ணையில் இருந்த கோழிகளின் எண்ணிக்கை = 10; பசுக்களின் எண்ணிக்கை = 26