பொருட்கள் | நன்மை |
கருஞ்சீரகம் | மார்பகப் புற்றுநோய் தவிர்ப்பு. ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்புச் சத்து குறைத்தல். |
ஏலக்காய் | எதிர் ஆக்சிகரணி. வயிற்று வலி நிவாரணம். |
கார மிளகாய் | வலி நிவாரணம். அதிகம் உட்கொண்டால் வயிற்றுப் புண், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படலாம் |
பட்டை | நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். வாய் துர்நாற்றம் போக்க உதவும். புற்றுநோய் அணுக்கள் பெருகாமல் தவிர்க்கலாம். வயிற்றில் H Pylori நுண்ணுயிர் கிருமி இருந்தால் உதவலாம். |
கொத்துமல்லி | நுண்ணுயிர்க் கிருமிக் கொல்லி, கல்லீரலை பாதுகாக்க உதவும். நல்ல கொழுப்பை அதிகமாக்கவும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும். வைட்டமின் C அதிகம். எதிர் ஆக்சிகரணி. |
ஜீரகம் | வாயுத் தொந்தரவுக்கு நல்லது. உலோகப் பொருட்களுடன் இணைந்து அவற்றை வெளியேற்றும் சக்தி கொண்டது. இதைச் Chelating Agent என்று ஆங்கிலத்தில் சொல்வர். இதனால் புற்றுநோய்களுக்கு உதவலாம். கணையம் மூலம் உணவுகளை செரிக்க உதவும் |
கறிவேப்பிலை | நீரழிவுக்கு உதவும். |
சோம்பு | எதிர் ஆக்சிகரணி. |
வெந்தயம் | ரத்ததில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். |
பூண்டு | இருதய நோய், பல் சொத்தை, ரத்த அழுத்தம் குறைக்கும். |
இஞ்சி | சிறுகுடல். பெருங்குடல் செயல்பாடுகளைச் சரி செய்யும். |
கண்டந்திப்பிலி | வயிற்றில் ஏற்படும் நுண்ணுயிர்க் கிருமிகளை எதிர்க்க உதவும். குறிப்பாக அமிபியாசிஸ் நோயில் உதவும். |
வெங்காயம் | ரத்த அழுத்தம் குறைக்கும். எதிர் ஆக்சிகரணி. |
மாங்காய் | வைட்டமின் A , C மற்றும் E அதிகம். எதிர் ஆக்சிகரணி. |
மாங்காய் இஞ்சி | நுண்ணுயிர்க் கிருமி கொல்லி எதிர் ஆக்சிகரணி. |
வேப்பிலை | HIV நோயில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவைப்படும் CD 4 அணுக்களை அதிகரிக்க உதவும். வைரஸ் எதிர்க்கத் தேவைப்படும் அணுக்களை அதிகரிப்பதாலேயே நம் முன்னோர்கள் அம்மைக்கு எதிராக இதை உபயோகித்தார்கள். |
குங்குமப் பூ | மன அழுத்தம் குறையவும், மாத விடாய்க்கு முன்னால் ஏற்படும் தொந்தரவுகளை (Pre menstrual symptoms) அடக்கவும் உதவும், |
ஓமம் | எதிர் ஆக்சிகரணி. புற்றுநோய் தவிர்க்க உதவும். மாரடைப்பை உண்டாக்கும் ரத்த அடைப்புகளைக் குறைக்க உதவும் |
மஞ்சள் | புற்றுநோய் தவிர்ப்பு. நுண்ணுயிர்க் கிருமிக் கொல்லி. தோல் வியாதியான சொரியாசிஸ் தீர்க்க உதவும். வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் அல்ஷைமர் நோயைக் குறைக்க உதவும். வலி நிவாரணம் (COX 2 Inhibitor). மன அழுத்தம் குறைக்கும் என்று சீன ஆராய்ச்சிகள் சொல்கின்றன |