பீட்ரூட்சாதம்
தேவையான பொருட்கள் சாதம் – 1 கிண்ணம் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 கிண்ணம் பீட்ரூட் துருவல் - 1/2 கிண்ணம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது)- சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க லவங்கம் - 2 பட்டை - 1 அங்குலத் துண்டு மிளகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி சிவப்புமிளகாய் - 2 வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
செய்முறை வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பீட்ரூட் துருவல் சேர்த்து வதங்கியதும், உப்பு, கொத்துமல்லி வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும். அதைச் சாதத்தில் நன்கு கலந்து சற்றே ஆறியபின் லஞ்ச் பாக்ஸில் வைக்கலாம்.
நித்யா நவீன் |