BATM: சித்திரை கொண்டாட்டம்
ஏப்ரல் 19, 2013 அன்று சான் ஃபிரன்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான்ட கிளாராவில் உள்ள டான் காளிஜான் பள்ளியில் சித்திரைக் கொண்டாட்டத்தை நடத்தியது. தலைமை தாங்கிய இந்தியக் கான்சல் பார்த்தசாரதி அவர்கள் நிகழ்ச்சியைக் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத் தலைவர் வரவேற்றார். விழாத் தலைவர் தமிழில் வாழ்த்துரையாற்றியது அருமை.

விழாவில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறாரும் சிறுமியரும் வண்ண ஆடைகளை உடுத்தி ஆடல், பாடல்களை வழங்கினர்கள். அதில் நாட்டுப்புற நடனங்கள் நிகழ்ச்சிக்குச் சுவைகூட்டின. இடைவேளைக்கு பெரியவர்கள் பங்கேற்ற ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி வெகு சுவாரஸ்யம். பின் வார்த்தை விளையாட்டு நடைபெற்றது. தயா அவர்கள் நன்றி கூறினார்.

குணா பதக்கம்,
சான்ட கிளாரா

© TamilOnline.com