ஜனவரி 2006: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

3. அடுத்த பெண்டாட்டி பாதி கையணி பெற்றும் முகத்தில் மலர்ச்சியில்லை (5)
6. முகூர்த்தத் துணியைக் கழகத் தலைவருக்குப் போர்த்துவது ஆடம்பரம் (4)
7. பேராசைப் படாதவர்களின் விரலுக்குப் பொருத்தமாய் இருக்கும் (4)
8. விலையுயர்ந்த மாலையில் வாடகை? (6)
13. மிளகாய்ப் பொடியின் கூட்டாளி குறைந்தாலும் பாதிக் கிண்ணம் சேர்வதில் தீய நோக்கமில்லை (6)
14. பண்டைக்கால புவனம் பாராத பாவமின்றி மறுபிறப்பு (4)
15. மனமுவந்து திரும்பும் ரமா முன்பு இருக்கின்றன (4)
16. பாதிச் சொத்தும் ஒரு பங்கு பரிவர்த்தனையில் ஒளியும் (5)

நெடுக்காக

1. அகராதியிலிருந்து இரண்டு பதம் சேர்த்து குற்றவாளிகள் கட்டுவது (5)
2. கடலில் செல்லாத கப்பல் இணைய கம்பி முனை உடையும் (5)
4. மீன் பிடிக்க முயல் (2,2)
5. கடல் மூலம் கப்பலில் வந்து கிளர்ச்சி (4)
9. பாதுகாப்பு கூர்க்கா வல்லமை கொண்டவன் (3)
10. கட்டியவன் கிருஷ்ணனைக் கூப்பிட தொடர்ந்தது பாதிக் கள்ளன் (5)
11. ரஷ்யத் தலைவரின் டாம்பீகம் குலைந்தாலும் தோற்றத்தில் மிடுக்கு (5)
12. அட்சய பாத்திரத்தைப் போன்றது நெருப்பு மாற்றித் தராது (4)
13. சிரி, உள்ளே பரிவான விலங்கின்றி மேற்செல்ல நிறைவேறு (4)


வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜனவரி 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@chennaionline.com. ஜனவரி 15க்குப் பிறகு, விடைகளை http://thendral. chennaionline.com என்ற சுட்டியில் காணலாம்.

சென்ற மாத புதிர்மன்னர்கள்

வி.சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
திலகா நாகராஜன், Bangalore
(sent by Ravi Sundaram)
சிங்காநல்லூர் கணேசன்

திர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத் துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

டிசம்பர் 2005 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 3. பருகு, 5. சந்தனம், 6. திணி, 7. பகல், 8. அரங்கம், 11. ஆறுமுகம், 12. செப்பு, 14. போது, 16. பண்பட்ட
நெடுக்காக: 1. பாசக்கயிறு, 2. புதன், 3. பம்பரம், 4. குதி, 9. கலப்படம், 10. பூகம்பம், 13. உபரி, 15. துவை(யல்)

புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது http://thendral.chennaionline.com/puthir-help.html என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.

© TamilOnline.com