ஏப்ரல் 20, 2013 அன்று மில்பிடாஸ் ஜைனக் கோவில் கலையரங்கில் பாரதி தமிழ்ச் சங்கம் விஜய வருடத் தமிழ்ப் புத்தாண்டின் வரவைக் கொண்டாடியது. சங்கத்தின் நிர்வாகி நித்யவதி சுந்தரேஷ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை சுபா, திருமுடி, வசந்தி, வெங்கடேஷ், கோமதி, கௌரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். 115 குழந்தைகளும் ஏராளமான பெரியோர்களும் பங்கேற்று, முத்தமிழிலும் கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். தமன் பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. லதா, சுகந்தி, கணபதி, சுபா, பிரசாத், பவித்ரா, அனிதா, வைஷ்ணவி, கோபி லக்ஷ்மிநாராயணன், வித்யா வெங்கடேசன், சுகி சிவா, கௌரி, உஷா அரவிந்த், லதா ஸ்ரீநிவாசன், ஹரிப்ரியா, சுஜாதா, காயத்ரி அருண், ரியான் நாதன், ஜனனிப்ரியா, கவிதா, அனுராதா, ஸ்வேதா குமார், விஸ்வாஸ், ரூபன் ஆகியோரின் குழுவினரும் மாணவர்களும் பங்கேற்று கர்நாடக இசை, நாட்டுப்புற ஆடல் பாடல், திரையிசைப் பாடல், குழு நடனங்கள், தனி நடனங்கள், பரத நாட்டியம், ஒடிசி, குச்சுப்புடி, ஜுகல்பந்தி, சிறு நாடகங்கள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி மனம் கவர்ந்தனர்.
திருமலை ராஜன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |