விரிகுடாப் பகுதி ஹனுமான் கோவில்
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கடமோசன ஹனுமான் திருக்கோவிலில் ஹனுமான் விக்கிரகத் திறப்புவிழா நெவார்க் நகரில் மேதகு மேயர் ஆலன் நாகி அவர்களால் செய்யப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 19, 20, 21 ஆகிய தேதிகளில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. முதல்நாள் அன்று ராமர் அவதார நாள் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரண்டாம் நாள் காலையில் பாலாஜி அபிஷேகமும், மதியம் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும், மாலையில் ஸ்ரீராம பட்டாபிஷேகமும் நடைபெற்றன. இறுதி நாள் முழுவதும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. மாலையில் சீதாராம கல்யாண விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை டாக்டர். பிரதீப் குமார் மற்றும் வேத விற்பன்னர் கோவிந்தன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

சக்தி பாலசுப்ரமணியன்,
நெவார்க், கலிஃபோர்னியா

© TamilOnline.com