சம்ஹிதா: நலவாழ்வுப் பயிலரங்குகள்
தூத்துக்குடியில் 16 வருடங்களாக சம்ஹிதா இயற்கை/சித்த/ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மற்றும் யோகாசன மையம் நடத்தி வரும் டாக்டர். ஜெயந்தி செந்தில், அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நலவாழ்வுப் பயிலரங்குகளைக் கீழ்க்கண்ட நாட்களில் நடத்தினார்:

பிப்ரவரி 9 - சான்டா கிளாரா - உடலமைப்பும், அதற்கேற்ற உணவும்
பிப்ரவரி 16 - ஃப்ரீமாண்ட் - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள்
மார்ச் 02 - டாம்பா - யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவம்
மார்ச் 10 - ஜாக்சன்வில் - சுவாசத்துக்கும் மன ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு
மார்ச் 16-17 - சார்லட் - சித்த மருத்துவம்
மார்ச் 28-ஏப்ரல் 3 - செயின்ட் லூயிஸ் - குழந்தைகளுக்கான கண் பயிற்சி முதல் பெரியவர்களுக்கான நோய் அணுகா விதிமுறைகள்
ஏப்ரல் 21 - BATM - மூச்சுப்பயிற்சிகள் செய்முறை விளக்கம்.

இவற்றின் வாயிலாக நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை முதலியவற்றுக்கு எளிய சிகிச்சை முறைகளை சொல்லிக் கொடுக்கிறார். உங்கள் உடல்நலம் உங்கள் கையில் என்பதே டாக்டர் ஜெயந்தி கொடுத்த செய்தி. எளிய மூச்சுப் பயிற்சி, உணவு முறைகளின் மூலமாக நோயின்றி வாழும் வழிமுறைகளை விளக்கினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளை 2010ல் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியிருக்கிறார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com