ஜூன் 9, 2013 அன்று மாலை 4 மணிக்கு பாரதி தமிழ்ச் சங்கம் 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' என்ற மாபெரும் தமிழ் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை அளிக்கிறது. நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி பாரதி தமிழ்ச் சங்கம் முழுமூச்சாகச் சிறந்த பல நிகழ்ச்சிகளை அளிக்க உதவும். தமிழ் நாட்டின் தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் திரையுலகப் பாடகர்களாக வளர்ந்திருக்கும் இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். 'ஹரியுடன் நான்' புகழ் அனுஷ் கணேஷ், காயத்ரி அருண், 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி குருப்ரசாத், 'சூப்பர் சிங்கர்-2009' வெற்றியாளர் ரவி கோபிநாத், ஜெயா டிவி 'ராகமாலிகா' புகழ் ஸ்ரீநாத் இவர்களோடு விமலா ரோஷிணி ஆகியோர் இந்த இசை இரவை அலங்கரிப்பர். இன்னிசை மழையில் நனைவதோடு, தொடர்ந்து தமிழ் மொழி, சமுதாய, கலாசாரப் பணிகளுக்கு உதவ இது ஒரு பொன்னான வாய்ப்பு.
நாள்: ஜூன் 9, ஞாயிறு நேரம்: மாலை 4 மணி முதல் இடம்: Spangenberg Theater, Henry M. Gunn High School, 780 Arastradero Road, Palo Alto, CA 94306. இணையத்தில் சீட்டு வாங்க: bharatitamilsangam.org மின்னஞ்சல் வழியே பதிவு செய்ய: tickets@bharatitamilsangam.org புரவலர் ஆவதற்கு: sponsors@bharatitamilsangam.org
மேலதிக விபரங்களுக்கு: வாசுதேவன் நஞ்சன்கூடு - 650.868.0510 நித்யவதி சுந்தரேஷ் - 510.857.3714 முத்துகுமார் ஸ்ரீநிவாசன் - 408.373.1977 திருப்பதி பீமாஸ் - 408.829.6086
திருமலை ராஜன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |