காந்தாரி


பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கும் திகில் கலந்த நகைச்சுவைப் படம் காந்தாரி. யாருமே குடிவராத ஒரு வீட்டில் எதிரிகளால் துரத்தப்படும் காதலனும், காதலியும் தஞ்சம் அடைகின்றனர். அந்த வீட்டில் முன்பு வசித்துத் தற்கொலை செய்து கொண்ட காந்தாரி என்ற இளம் பெண்ணின் ஆவி, தன் சாவுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்க அந்தக் காதலனின் உடம்பில் புகுந்து கொள்கிறது. அவள் பழிவாங்கினாளா, காதலன் தப்பித்தானா, அவர்கள் காதல் நிறைவேறியதா என்பது கதை. யுவன் நாயகனாக நடிக்க, நாயகிகளாக இஷா, பிரதிக்ஷா மைதிலி ஆகியோர் அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் நாசர், சந்தானபாரதி, காதல் தண்டபாணி, கலாபவன் மணி, வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் ஆனந்த இசை, எம்.கே.குமார் இயக்கம்.

அரவிந்த்

© TamilOnline.com