ஆள்


சிக்கிம் மாநிலத்தில் பேராசிரியராக வேலை செய்யும் ஒருவர், சென்னைக்குத் தன் காதலியையும், தாயையும் சந்திக்க வருகிறார். அவரை ஒரு கும்பல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு காரியத்தை செய்யச் சொல்கின்றது. அந்த பயங்கரச் செயலை அவர் செய்கிறாரா, அவரை மட்டும் ஏன் அந்த கும்பல் அதைச் செய்ய வைக்கின்றது என்பவற்றைச் சொல்ல வருகிறது 'ஆள்'. சிக்கிமில் நடந்த ஒரு உண்மைச் சம்பவமே இப்படத்தின் கதை. சுசி கணேசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்த கிருஷ்ணா படத்தை இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக விதார்த் நடிக்க, நாயகியாக கார்த்திகா ஷெட்டி அறிமுகமாகிறார். இசை: ஜோகன்.

அரவிந்த்

© TamilOnline.com